search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு ரெயில் நிலையம்"

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னையில் இருந்து காலை 6.30 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பயணிகள் இறங்கி சென்று கொண்டிருந்தனர். 4-வது பிளாட்பார்ம் மற்றும் 3-வது பிளாட்பார்முக்கு இடைப்பட்ட ‘சப்-வே’ வழியில் பயணிகள் வேகமாக இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பார்மின் மேற்கூரை கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஈரோடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி (வயது 42) என்பவரது தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் மேற்கூரையின் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் நடந்து சென்ற மேலும் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு ஈரோடு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. . #Train

    ஈரோடு:

    ஈரோடு வழியாக பெங்களூருக்கு ஆயில் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு தண்ட வாளத்தில் குட்ஷெட்டில் இருந்து பணிமனை நோக்கி ஒரு ரெயல் என்ஜின் இயக்கப்பட்டது.

    எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதியது. இதில் பணிமனை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் தடம் புரண்டது. இதில் அந்த என்ஜினில் உள்ள ஏணிப்படிகள் உடைந்து சேதமடைந்தன.

    என்ஜினின் வலதுபுற மேல் பகுதி சேதம் அடைந்தது. ஆனால் பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

    ஆயிலை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரெயில் வேகமாக மோதி இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்துவதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி என்னும் நவீன கருவி துணையுடன் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடங்கள், என்ஜின் டிரைவர்களின் கட்டுப்பாட்டு அலுவலகம், ரெயில்வே தண்டவாளங்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மேலாளர் பார்வையிட்டு, ரெயில்வே ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நான் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளராக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முதல் முறையாக வந்து ஆய்வு செய்தேன். இங்கு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து பார்வையிடப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு லிப்ட் அடுத்த மாதம் ஜூலை 15-ந் தேதிக்குள் திறக்கப்படும். மற்றொரு லிப்ட் 3 மாதங்களில் அமைக்கப்படும். நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும்.

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகளில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அடுத்த மாதத்திற்குள் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகள் இருக்காது. பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஒருசில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ஈரோடு-திருச்சி மார்க்கத்தில் மின்சார என்ஜின்கள் இயக்குவதற்காக மின்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதியில் இருந்து 7 ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலமாக இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகள் உள்ளன. அனைத்து ரெயில்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை நிற்கின்றன. இதனால் நடைமேடைகளில் ஒரு ரெயில் நின்றிருக்கும்போது, மற்றொரு ரெயில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நடைமேடைகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை தற்போது இல்லை.

    ரெயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான இடங்களில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற ஆணை இன்னும் வரவில்லை. இதற்கான ஆணை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
    ×